HISTORY







 Sri Kamatchi Amman




* திருக்காஞ்சி தீப தரிசனம் பாபவிமோசனம்.



* திருக்காஞ்சியில் பௌர்ணமி கிரிவலம் வாழ்வில் பெரும் நலம்.



* திருக்காஞ்சி சங்கராபரனியில் நீராடிட சங்கடங்கள் ஓடிடுமே.



* திருக்காஞ்சி ஸ்ரீ லட்சுமி வராகரை வழிபடுவோம் வாழ்வில் வளம் பல பெறுவோம்.



* திருக்காஞ்சி காமாட்சியை வழிபட கலங்கிடும் வல்வினை.



* திருக்காஞ்சி துண்டி விநாயகனை வழிபடுவோம். துன்பமின்றி வாழ்ந்திடுவோம்.



* வந்தனை செய்வோரை வாழவைப்பாள் திருக்காஞ்சி மங்களவராகி.



* திருக்காஞ்சி குமரனை வழிபடுவோம். குறையின்றி வாழ்ந்திடுவோம்.



* திருக்காஞ்சி கால பைரவரை வழிபடுவோம். காலன் பயம் போக்கிடுவோம்.



* திருக்காஞ்சியில் ஒரு பிடி அன்னதானம் பேரின்பத்தின் மூலதனம்.



* பிதுர் தோஷம் நீங்க திருக்காஞ்சிக்கு வாங்க.



* திருக்காஞ்சி பிரதோஷம் வழிபாடு சந்தோஷத்தின் மேம்பாடு.




பித்ரு தோஷம் நீங்க :: ஶ்ரீ கங்கைவராக நந்தீஸ்வரர் கோவில்

கர்ம வினை மற்றும் பித்ரு தோஷம் நீக்க வழிபட வேண்டிய சிவன் கோவில்.

பித்ரு தோஷம் நீங்க மிகவும் வழிபட வேண்டிய சிவஸ்தலம் 

எங்கு உள்ளது


இந்த திருத்தலம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வேதம் என்ற ஊரினை உடைய வேதபுரி என்னும் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்ற ஊரில் உள்ளது. இந்த ஊர் காசிக்கு நிகராக உள்ள திருக்காஞ்சி என்ற ஊர். இந்த கோவில் பெயர் கெங்கவராய நந்தீஸ்வரர் கோவில்.

கோவில் திறந்திருக்கும் நேரம்

இந்த கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் உண்டு.

கோவில் சிறப்பு

இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இது சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் ஆக திகழ்கிறது. மேலும் இந்த கோவில் அகத்தியரின் கையால் 
ஆவாகனம் செய்யப்பட்டது இந்த சிவ லிங்கம்.

கோவில் பெருமை

இந்த கோவில் ராகு மற்றும் கேது பகவான் வழிபட்ட தலம் ஆகும். மேலும் இந்த கோவிலில் சிவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார். ராகு மற்றும் கேது தோஷம் நீங்க இந்த தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

பித்ரு தோஷம்

இவ்வூரின் வடக்கு திசையில் ஓடும் வராக புண்ணிய நதியில் குளித்துவிட்டு இந்த தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை வழிப்பட்டால் முன்னோர்களின் சாபமாகிய பித்ரு தோஷம் நீங்க பெருவதோடு வாழ்வில் அனைத்து செல்வங்களும் சேரும்.

இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஷோடச லிங்கத்தை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் சான்று. இந்த சோடச லிங்கம் பதினாறு பட்டைகள் கொண்ட உடையை கொண்டது.

அகத்தியர் பிரதிஷ்டை
I itspan style="color: blue; font-family: "trebuchet ms" , sans-serif; font-size: medium;">
இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சித்தர்களின் மிகவும் வலிமை வாய்ந்த அகத்திய முனிவரால் ஆவாகனம் செய்யப்பட்டது.

சிவனின் பெருமை

மேலும் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ள சிவ பெருமான் சென்னையில் உள்ள திருவான்மியூர், ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மற்றும் இந்த ஊரான திருகாஞ்சி ஆகிய தலங்களில் மட்டுமே உண்டு.

ஸ்தல வரலாறு

முன்னொரு காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியை புனித நதியான கங்கையில் சேர்ப்பதற்காக போகும்போது வழியில் திருகாஞ்சி என்ற இந்த ஊர் எல்லைக்கு வரும் போது அதில் உள்ள அஸ்தி பூவாக மாறியிருந்தது.

அப்போது அவர்கள் காசியை விட அதிக சக்தி வாய்த இடம் என்ற ஒலியும் கேட்டது. அப்போதில் இருந்து காசியில் செய்யும் பித்ரு காரியங்களை இந்த ஊரில் செய்தனர்.<காசிக்கு நிகராக இந்த ஊர் கருதப்படுகிறது. ஆகவே இந்த திருத்தலம் பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வெற்றி அடைய இந்த கோவிலை வழிபாடு செய்யலாம் .கோவிலின் வேறு பெயர்கள்

SRI GANGAIVARA NATHEESHWAR

undertaking by

Government of Puducherry

E-maid:srigangainatheeshwar@gmail.com

Thirukanji,

Pondicherry 605 110

Web Design by

E. SELVAKUMAR D. T. Ed., B. A., B. Sc.

Mobile: 9092765368

E-mail: selvaviji0603@gmail.com

Kilinjikuppam, Cuddalore