/th> |
அம்பாள் மீனாட்சியம்மனாவார். இவரது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். இந்த கருவறை விமானத்தை தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால் மீனாட்சி என்று பெயர் பெற்றார். தன்னுடைய முட்டைகளை மீன் பார்வையாலேயே தன்மயமாக்குவது போல பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில் கிளியும் இடம்பெற்றள்ளது. பக்தர்களின் கோரிக்கையை அம்பிகைக்கு நினைவூட்ட திரும்ப திரும்ப கிளி சொல்லிக் கொண்டிருப்பத நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாபவிமோசனத்திற்காக இத்தலத்தினை தேடி வந்தபோது கிளிகளே சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.
இவர் மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை அலங்காரம் செய்த பிறகே பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன்பின்பே மூலவரான சிவபெருமானுக்கு பூசைகள் செய்யப்படும். இதற்கு மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து எப்போதுமே தன்னுடைய கணவனுக்கு தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால் கணவரை எழுப்பும் முன்பே மனைவியான அம்பிகை அபிசேகத்தினை முடித்து தயாராகிறாள். இதனால் காலையில் முதல் பூசை மீனாட்சிக்கு செய்யப்படுகிறது |
---|---|
SRI GANGAIVARA NATHEESHWAR undertaking by Government of Puducherry E-maid:srigangainatheeshwar@gmail.com Thirukanji, Pondicherry 605 110 |
Web Design by E. SELVAKUMAR D. T. Ed., B. A., B. Sc. Mobile: 9092765368 E-mail: selvaviji0603@gmail.com Kilinjikuppam, Cuddalore |